Monday, February 1, 2010

Traditional Home Remedies

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

அவரைப் பிஞ்சை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் விரைவாக குறையும்.

தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.

மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம்.

வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.

வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம்.

அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம்.

இர‌ண்டு கர‌ண்டி க‌றிவே‌ப்‌பிலை சா‌ற்றை ஒரு ட‌ம்ள‌ர் மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்தா‌ல் அ‌ஜீரண‌ம் ‌நீ‌ங்கு‌‌ம்.

ப‌ப்பா‌ளி‌‌த் பழ‌த் து‌ண்டை ப‌ல் வ‌லி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் அட‌க்‌கி வை‌க்க ப‌ல் வ‌லி ‌தீரு‌ம்.

ப‌ல் சொ‌த்தையான இட‌த்‌தில‌் ‌கிரா‌ம்பை நசு‌க்‌கி வை‌த்து, வா‌யி‌ல் வரு‌ம் உ‌மி‌ழ்‌நீரை வெ‌ளியே‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ப‌ல் சொ‌த்தை காணாம‌ல் போகு‌ம்.

வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் ‌சீரக‌த்தை வறு‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த ‌சீரக கஷாய‌‌த்தை‌க் கொடு‌க்க உடனடியாக வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.

No comments:

Post a Comment