தக்காளி
தக்காளியின் காய், பழம் இரண்டிலும் வைட்டமின் ஏ, பி, சி, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளன.
தக்காளி ஓரளவிற்கு ஆரஞ்சுப்பழத்தின் குணத்தை உடையது. எனவே, தக்காளிச் சாற்றுடன் சிறிதளவு சர்க்கரை கூட்டி சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் பலமும், சுறுசுறுப்பும் உண்டாகும்.
தக்காளி செடியை ஒன்றிரண்டாக நறுக்கி நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர, சிறுநீர் எரிச்சல், உடல் வீக்கம், மேக நோய் முதலியவை குணமாகும். உடல் பலம் பெறும்.
தக்காளியை துவரம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்த சாப்பிட்டு வர உடலுக்கு குளிர்ச்சியையும், ரத்தப் பெருக்கையும் உண்டாக்கும்.
ரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு சிறிது தூரம் நடந்தாலே மூச்சுத்திணறல் உண்டாகும். இவர்கள் அடிக்கடி தக்காளியை சாப்பிட்டு வர ரத்த சோகை நோய் குணமாகும்.
Tomato and Blood Circulation
சிலர் பல்வேறு உடல் உபாதைகளுக்காக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது.
தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது. அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.
ஆய்வு குறித்து கூறுகையில், ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது என்று தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment